குரைஷியர் குல கோமான்
1) அல்லாஹ் இஸ்மாயில் (அலை) அவர்கள் வழியில் கினானா வம்சத்தினரை தேர்ந்தெடுத்தான். கினானா வம்சத்தினரில் குரைஷியர் குலத்தினரில் ஹாஷிமி கிளையினரைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிமி கிளையினரில் என்னைத் தேர்ந்தெடுத்தான்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
2) எனக்கும் முந்திய நபிமார்களுக்கும் ஓர் உதாரணம், ஒருவர் அழகிய கட்டிடத்தைக் கட்டினார் கட்டிடம் மிக கவர்ச்சியாக இருந்தது ஆனால் அதன் மூலையில் ஒரு செங்கல் வைக்கப்படாமல் (காலியாக) இருந்தது அக்கட்டிடத்தை ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தவர்கள். இங்கே ஒரு கல் வைக்கப்பட்டிருக்கலாமே என்று கூறுகின்றனர். நானே அக்கல் போன்றவன், நானே நபிமார்களில் இறுதியானவன்.
நூல்கள்:புகாரி-முஸ்லிம்
3) எனக்குப் பிறகு ஒரு நபி இருப்பார் என்று இருந்தால் உமர் நபியாக இருப்பார். இருந்தாலும் எனக்குப் பின் நபியே கிடையாது.
நூல்:தப்ரானி
மனிதகுல தலைவர்
4) கியாமநாளில் ஆதம் நபியுடைய மக்களுக்கு நானே தலைவன். மண்ணறையிலிருந்து முதலில் எழுப்பப் படுவோனும் நானே! முதல் (ஷபாஅத்) பரிந்துரையாளனும் நானே! முதலில் அங்கீகாரம் பெருபவனும் நானே.
நூல்:முஸ்லிம்
5) என் சிறப்புகள் ஆறு
1. பொருள் நிறைந்த பொன்மொழிகள் வழங்கப் பட்டிருக்கின்றேன்.
2. என்னைக் கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
4. நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மைப்படுத்தும் பொருளாகவும் எனக்கு ஆக்கப்பட்டிருக்கின்றது.
5. மனிதகுலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
6. நபிமார்களின் வருகை என்னால் நிறைவுபடுத்தப்படுகிறது.
நூல்:முஸ்லிம்
6) எனக்கு ஐந்து சிறப்புப் பெயர்கள் உண்டு
1. முஹம்மது - புகழப்பட்டவர்
2. அஹ்மத் - இறைவனை மிகவும் புகழ்பவர்.
3. அல் மாஹி - என் மூலம் குஃப்ர் அழிக்கப்படும்.
4. அல் ஹாஷிர் - மறுமையில் எல்லோரும் எனக்குப் பின் எழுப்பப்படுவார்கள்.
5. அல் ஆக்கிப் - இறுதி நபி
6. ரவூஃப் - ரஹீம் என்றும் அல்லாஹ் எனக்குப் பெயர் வைத்தான்!
நூல்:புகாரி-முஸ்லிம்
7) கியாம நாளையில் மற்ற நபிமார்களை பின்பற்றுவோர்களைவிட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.
நூல்:முஸ்லிம்
8) ஒரு கூட்டம் என்னுடைய (பரிந்துரை) ஷஃபாஅத்தின் பேரில் நரகத்தை விட்டும் வெளியேறுவார்கள். பிறகு அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.
நூல்:புகாரி
9) எனது உம்மத்தினர்களில் பெரும் பாவிகளுக்கும் என்னுடைய ஷஃபாஅத் (பரிந்துரை) உண்டு.
நூல்:அபூதாவூது
10) ஒரு சமயம் திருநாபி (ஸல்) அவர்கள் முன்கொண்டு வரப்பட்ட ஒருவர், அவர்களைக் கண்டு பயப்படலானார். திருநபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை நோக்கி, "நான் அரசர் என்று நீர் நினைக்காதீர், காய்ந்த மீனை உண்ணக் கூடிய குறைஷியர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்" என்றார்கள்.
நூல்:புகாரி
11) என்னை உங்கள் உயிருக்கு மேலாக, உங்கள் பெற்றோருக்கு மேலாக, உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திற்கும் மேலாக என்னை நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்.
நூல்கள்:முஸ்லிம்,அபூதாவூது,பைஹகீ
அற்புதங்கள்
12) ஒரு சமயம் அபூஜஹலும் அவனுடன் ஒரு சிலரும் திருநபி (ஸல்) அவர்களிடம் வந்து உமது மார்க்கம் உண்மையான மார்க்கம் என்றால் அமாவாசை இருட்டு வேளையில் வான்மதியை உதிக்கச் செய்து அந்த மதியை இரண்டாகப் பிளந்து காட்டும் என்று கூறினார்கள்.
"நீங்கள் கூறுவது போன்று நான் அல்லாஹ்வின் உதவியால்செய்து காட்டினால் நான் நபி என்று ஒப்புக் கொள்வீர்களா?" என்று திருநபி (ஸல்) வினவியபோது நிச்சயம் ஒப்புக் கொள்கிறோம் என்று பதில் கூறினர்.
திருநபி (ஸல்) தங்களின் புனித விரலின் மூலம் வான்மதியை அழைத்த உடனே வான்மதி தோன்றி இரு துண்டாகப் பிளாந்து பார்ப்பவர்கள் முன் காட்சியளித்தது.
நூள்:பத்ஹூல் பாரி
13) நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும் அல்லாஹ்வின் தூதரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.
அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்*
14) தொழுகையின் ஸஃப்பில் (வரிசையில்) நேராக நில்லுங்கள். எனது உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நான் உங்களை முன்னால் பார்ப்பது போலவே எனக்குப் பின்னாலும் நான் உங்களைப் பார்க்கின்றேன்.
அறிவிப்பவர் - அனஸ்(ரலி)
நான் தொழுகின்ற சமயம் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கின்றேன்.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம்
15) நாலாவது வானில் ஒரு நட்சத்திரம் உண்டு அது எழுபதினாயிரம் வருடங்களுக்கு ஒரு தடவைத்தான் உதயமாகும். ஒரு சமயம், திருநபி (ஸல்) அவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம், "அந்த நட்சத்திரத்தை நீங்கள் எத்தனை தடவை பர்த்திருக்கிறீர்கள்?"என்று வினவிய போது, அதற்கு ஜிப்ரயீல்(அலை) அவர்கள், "இறை நபியே! நான் அந்த நட்சத்திரத்தை இருபத்தேழாயிரம் முறை பார்த்திருக்கின்றேன்" என்று என்று கூறினார்கள்.
அல்லாஹ் என்னை கண்ணியப்படுத்தினான் நான்தான் அந்த நட்சத்திரம் என்று திருநபி (ஸல்) அவர்கள் கூரினார்கள்.
நூல்:ரூஹூல் பயான்
நபித்துவம்
16) தந்தை ஆதம் நபி(அலை) அவர்கள் களிமண்ணிற்கும் தண்ணீருக்கும் இடையில் இருக்கும்போதே எனக்கு நபித்துவம் வழங்குபட்டுவிட்டது.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) நூல்கள்:புகாரி, முஸ்லிம்-பைஹகீ
17) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை எடுத்துப் போட்ட சமயமே நான் இறுதித் தூதர் என்று தீற்மானிக்கப்பட்டேன்.
நூல்:அஹ்மது, திர்மிதி
18) ஆதம் நபி(அலை) அவர்களைப் படைப்பதற்கான மண்ணை இறைவன் தன் கரத்தால் பிசைந்தான்.
நூல்:இஹ்யா
நான் சொல்லும் நாற்பது மொழி
19) யார் எனது நாற்பது மொழிகளை மனப்பாடம் செய்து கொள்வாரோ அவரை அல்லாஹ் கியாம நாளில் உலமாக்களின் கூட்டத்தில் எழுப்புவான்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
20) (யார் எனது நாற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவருக்காக நான் கியாம நாளில் மன்றாடுவேன்.
அறிவிப்பவர்:அபூதர்தா
21) (யார் எனது நற்பது மொழியை மனப்பாடம் செய்வாரோ) அவரிடம் சொர்க்கவாசல்களில் எந்த வாசல்களில் வேண்டுமானாலும் நுழைவாயாக! என்று கூறப்படும்.
அறிவிப்பவர்:அபூ மஸ்வூத்
22) யார் தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற உறுதியோடு எனது மொழிகளை எழுதிக் கொள்வாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மனித்து விடுகிறான்.
கன்ஜுல் உம்மால்
23) யார் எனது நாற்பது மொழிகளை (உலகில்) போதித்துவிட்டு மரணிப்பாரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது தோழராகி விடுவார்.
நூல்:குனூஜுல் ஹகாயிக்
24) எனது சிறிய வாத்தையில் பல பெரிய கருத்துக்கள் அடங்கி இருக்கும். இது மற்ற நபிமார்களுக்கு கிடையாது.
நூல்:மிஷ்காத்
25) குரைஷியர்கள் என்னை திட்டுவதை, சபிப்பதை விட்டும் இறைவன் என்னை எவ்வாறு பாதுகாக்கின்றான் என்பதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? இகழப்பட்டவர் என்று என்னை பழிக்கின்றார்கள். ஆனால் இறைவனால் நான் (முஹம்மத்) என்று புகழப்பட்டவனாக இருக்கின்றேன்.
நூல்:புகாரி
நபி விழா! ஒரு திருவிழா!
26) இறை தூதரே! ஒவ்வொரு திங்கள் கிழமையும் நீங்கள் நோன்பு நோற்கிறீர்களே ஏன்? என்ற கேள்விக்கு அன்றுதான் நான் பிறந்த நாளாகும் என்று திருநபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்:பின் ஹர்ப்(ரலி) நூல்:முஸ்லிம்
27) திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை தெரிவித்த சுவைபா என்னும் பெண்ணுக்கு விடுதலை அளித்த அபூலஹப் அதனால் (நிராகரித்தவராக மரணித்தாலும்) ஒவ்வொரு வருடமும் திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த நேரத்தில் மண்ணறை வேதனை குறைக்கப்படுவதாக திருநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்ஹதீஸ்
பெண்கள்
28) உலகத்தில் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்
1. பெண்கள்
2. நறுமணம் (வாசனைப் பொருள்)
3. கண்கள் குளிர்ந்திடும் தொழுகை
29) பெண்களைப் பற்றிய நன்மைகளைச் சொல்கிறேன். உண்மையில் அவர்களை அல்லாஹ்வின் நல்லடியார்களாக கொண்டு இறைவனின் கட்டளைபடி அவர்களை துணையாக ஏற்றுக் கொண்டீர்கள், எனவே அவர்களுடன் கூடி வாழ்வதை அழகுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!
யாதொரு குற்றம் குறையின்றி அவர்களை ஒருவன் அடித்தால் கியாம நாளில் நான் அவன் மீது குற்றம் சுமத்துவேன்.
அல்ஹதீஸ்
30) பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்! ஏனென்றால் அவர்களே உங்களில் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்.
அல்ஹதீஸ்
31) உங்கள் ஆடைகளை, உங்கள் (தலை) முடிகளை அலங்கரித்துக் கொள்ளுங்கள்! பற்களைத் தீட்டிக் கொள்ளுங்கள்! அழகாகவும் கவர்ச்சியாகவும் தூய்மையாகவும் இருங்கள்! இஸ்ரவேலர்கள் இவ்வாறு தம்மை அலங்கரித்துக் கொள்ளாத காரணத்தினால் தான் அவர்களின் மனைவிமார்கள் விபச்சாரிகளாகி விட்டனர்.
அல்ஹதீஸ்
32) நீங்கள் கற்புடையவர்களாக இருங்கள் உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பார்கள்.
நூல்:துர்ரமன்துர்
தலாக்
33) ஆகுமாக்கப்பட்டவைகளில் இறைவனுக்கு கோபம் தரக் கூடியது தலாக் (மண விடுதலை) ஆகும்.
நூல்:அபூதாவூது
34) ஒழுக்கக் கேடு இல்லாத மனைவிகளை நீங்கள் அநியாயமாக தலாக் (மண விடுதலை) செய்யாதீர்கள்! காமத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட ஆண்களையும் பெண்களையும் இறைவன் நேசிப்பதில்லை!
நூல்:தப்ரானி
35) எந்த ஒரு பெண்ணும் கடுமையான கொடுமை இன்றி தன் கணவனிடம் தலாக் கோருவாளேயானால் அவளுக்கு சொர்க்கம் கிடையாது.
நூல்:அஹ்மது
36) குடிபோதையில் இருப்பவருடைய தலாக்கும், பைத்தியக்காரருடைய தலாக்கும் செல்லுபடியாகாது.
அல்ஹதீஸ்
பெண்ணறிவு
37) ஈமான் கொண்ட மனிதனுக்கும் அல்லாஹ்வின் பயத்திற்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள்! அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
நூல்:இப்னு மாஜா
38) எந்த ஒரு மனைவி தன் கணவனிடம் முகத்தில் (கோபக் குறியைக் காட்டி) கடுகடுக்க பேசுவாளோ அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.
அல்ஹதீஸ்
39) பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேனென்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது பெண்களில் சிலர் காரணம் என்ன? என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்ப்டுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை என்று கூறினார்கள்.
அல்ஹதீஸ்
No comments:
Post a Comment